இயற்கையிலேயே எழில் கொண்ட காயல் அமைவிடமாம், தாமிரபரணி நதி வங்கக் கடலுடன் சங்கமிக்கும் முகத்துவாரத்தில், கடல் தொழிலுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்ட ஊர் புன்னைக்காயல் கரை விலகிய மணற்திட்டு இதனை நல்லதொரு பொழுதுபோக்குத் தலமாக ஆக்கியுள்ளது. ஊரைச் சுற்றிலும் ஓடும் ஆறுகளால் சதுப்பு நிலம் சூழ்ந்து அலையாத்திக் காடுகள் வளர்ந்து சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து காத்துக்கொள்ளும் அமைப்பைப் பெற்றுள்ளது பழங்காலத்தில் இது ஒரு துறைமுகமாக விளங்கியது என்பதற்கான ஆதாரங்கள் காணக்கிடக்கின்றன. ஐந்நூறு ஆண்டுகளுக்குமுன் புனிதர் சவேரியாரின் அர்ப்பணம் சுவைத்த புண்ணிய பூமி. இறைவன் இயேசுவின் அடிச்சுவட்டில் ஆயிரமாயிரம் ஆன்மாக்களை கத்தோலிக்கத் திருமறையில் திருமுழுக்குக்கொடுத்து வழிநடத்திய பெருமை காலத்தால் அழியாதது.
புன்னைக்காயலுக்கு
வாருங்கள்
புன்னைக்காயல் அன்னை ராஜகன்னி மாதா
திருவிழா சிறப்பு
நேரடி ஒளிபரப்பு

![]() _MG_7515 | ![]() _MG_7167 | ![]() _MG_7159 |
---|---|---|
![]() _MG_2043 | ![]() _MG_7157 | ![]() _MG_1921 |
![]() _MG_7489 | ![]() _MG_7565 |